search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எம்.எஸ். டோனி- ரிஷப் பண்ட் ஒப்பீடு- தினேஷ் கார்த்திக் சொல்வது என்ன?
    X

    எம்.எஸ். டோனி- ரிஷப் பண்ட் ஒப்பீடு- தினேஷ் கார்த்திக் சொல்வது என்ன?

    • சென்னை டெஸ்டில் சதம் அடித்து எம்.எஸ். டோனி சாதனையை சமன் செய்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் டோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கிய பிறகு சுமார் 700 நாட்கள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களம் இறங்கினார். இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

    அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் 6 சதங்கள் அடித்த எம்.எஸ். டோனியின் சாதனையை சமன் செய்தார். இதற்கிடையே எம்.எஸ். டோனி- ரிஷப் பண்ட் ஆகியோரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற ஒப்பீடு இணைய தளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

    இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டியில் விளையாடிள்ளார். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஆனால் உறுதியான இந்தியாவில் இதுவரை இல்லாத வகையிலான விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பார்.

    விக்கெட் கீப்பராக டோனியின் தகுதியை குறைத்து விடாதீர்கள். இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தபோது அவர் அற்புதமாக பேட் செய்தார் மற்றும் ரன்களை எடுத்தார். அவர் இந்தியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தலைமை தாங்கினார். இந்தியா நம்பர் ஒன் அணியாக உள்ளது. எனவே நீங்கள் ஒருவரை பற்றி பேசும்போது எல்லாவற்றையும் பற்றி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×