search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை.. இக்கட்டான சூழலில் ரிஷப் பண்ட்டின் மாஸ்டர் பிளான் வெற்றிக்கு உதவியது- ரோகித் சர்மா
    X

    டி20 உலகக் கோப்பை.. இக்கட்டான சூழலில் ரிஷப் பண்ட்டின் மாஸ்டர் பிளான் வெற்றிக்கு உதவியது- ரோகித் சர்மா

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
    • அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பும்ரா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா என பலரும் முக்கிய காரணமாக இருந்தனர். அந்த வகையில் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட்டின் மாஸ்டர் பிளான் இந்திய வெற்றி பெற முக்கிய பங்காக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதில் டேப் போடப்பட்டது. ஆட்டம் அதிரடியாக சென்ற நிலையில் இந்த சம்பவத்தால் ஆட்டம் மெதுவாகியது.

    சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியதால் முதல் பந்திலேயே கிளாசன் அவுட் ஆனார். அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதட்டம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தனர். இதனால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    Next Story
    ×