என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஓய்வு அறிவித்த ஷிகர் தவானுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
- ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
- ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா வாழ்த்து.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.
38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டியில் 2018- ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் தனது எக்ஸ் பதிவில், "கிரிக்கெட் ஆடுகளம் நிச்சயம் உங்களது ஆரவாரத்தை இழக்கும். உங்கள் புன்னகை, உங்கள் ஸ்டைல் மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் மற்றவர்களை ஈர்க்க கூடியது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கங்களை நீங்கள் புரட்டி பார்த்தால் அதில் உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது அனைத்தும் சிறந்ததாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். எப்போதும் சிறிது கொண்டே இருங்கள் ஷிகர் தவான்" என்று பதிவிட்டுள்ளார்.
The cricket field will surely miss your flamboyance, @SDhawan25. Your smile, your style, and your love for the game have always been infectious. As you turn the page on your cricketing career, know that your legacy is forever etched in the hearts of fans and teammates alike.… pic.twitter.com/TR3TvbAj8w
— Sachin Tendulkar (@sachin_rt) August 24, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்