search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாட்ஷா யுவராஜ்.. பாலிவுட் திரைபட தலைப்பை இந்திய வீரர்களுக்கு சூட்டிய கம்பீர்- வைரல் வீடியோ
    X

    "பாட்ஷா" யுவராஜ்.. பாலிவுட் திரைபட தலைப்பை இந்திய வீரர்களுக்கு சூட்டிய கம்பீர்- வைரல் வீடியோ

    • பும்ராவின் தலைப்பு இவை அனைத்தையும் விட முக்கியமானது என்று கம்பீர் கூறினார்.
    • இதில் ரோகித் சர்மா மற்றும் டோனியின் பெயர்கள் இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஷிகர் தவான் ஒரு வேடிக்கையான உரையாடலில் கலந்து கொண்டார்.

    அதில் 'பாலிவுட் திரைப்பட தலைப்புகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பொருத்தமானவர் யார் என கூற வேண்டும்.

    அந்த வகையில் கோலிக்காக, கம்பீர் "ஷாஹென்ஷா" (பேரரசர்) என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார். யுவராஜ் சிங்கை "பாட்ஷா" என்று அழைத்தார் மற்றும் நகைச்சுவையாக தன்னை "கோபமான இளைஞன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் "தபாங்" என்று அழைக்கப்பட்டார். அதே நேரத்தில் பும்ரா "கிலாடி" என்ற பட்டத்தை பெற்றார். பும்ராவின் தலைப்பு "இவை அனைத்தையும் விட முக்கியமானது" என்று வலியுறுத்தினார்.

    துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ராகுல் டிராவிட்டை "மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்" என்று பெயரிட்டார். டைகர் சவுரவ் கங்குலி, கப்பார் ஷிகர் தவானை தேர்வு செய்தார்.

    ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிரிவின் போது ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனியின் பெயர்கள் காணாமல் போனது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.


    இந்த பட்டியலில் ஷிகர் தவானிடமும் கேட்கப்பட்டது. அதற்கு தவான் அளித்த பதில் பின்வருமாறு:-

    பாட்ஷா: கிங் கோலி

    கோபமான இளைஞன்: சிராஜ்

    தபாங்: ஹர்திக் பாண்ட்யா

    ஷாஹென்ஷா: பும்ரா

    கிலாடி: சுப்மன் கில்

    மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் (Mr. Perfectionist): சச்சின் டெண்டுல்கர்

    கப்பர்: சூர்யகுமார் யாதவ்

    என தவான் கூறினார்.

    Next Story
    ×