search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜெய்ஷாவை விமர்சனம் செய்த வெளிநாட்டு ஊடகங்கள்- பதிலடி கொடுத்த கவாஸ்கர்
    X

    ஜெய்ஷாவை விமர்சனம் செய்த வெளிநாட்டு ஊடகங்கள்- பதிலடி கொடுத்த கவாஸ்கர்

    • கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது.
    • பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

    ஐசிசி-யின் அடுத்த தலைவராக பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த பொறுப்பில் அவர் இந்திய கிரிக்கெட்டில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தது, முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை துவக்கியது, ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களின் பரிசுத்தொகையை அதிகரித்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்து அதிரடி காட்டினார்.

    இந்நிலையில் ஐசிசி-யின் தலைவராக நியூசிலாந்து நாட்டின் கிரேக் பார்க்லே இருந்து வருகிறார். 2020-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2022-ல் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே தற்போது 3-வது முறையாக தலைவர் பதவியில் இருக்க விரும்பாத அவர் தாமாக விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    ஆனால் ஐசிசி தலைவர் பதவியை அடைவதற்காக கிரேக் பார்க்லேவை ஜெய் ஷா வலுக்கட்டாயமாக பதவி விலகச் செய்ததாக சில இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் ஜெய்ஷா குறித்த விமர்சனங்களுக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    ஜெய் ஷா அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட்டை போலவே ஐசிசி அமைப்பிலும் அவர் தலைவரானால் உலக அளவில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு பெரிய பயனை கிடைக்கும்.

    கிரேக் பார்க்லே 3-வது முறையாக தலைவர் பதவியை விரும்பாததால் விலகுவதாக சொன்னார். ஆனால் ஜெய் ஷா கட்டாயத்தில் அவர் விலகுவதாக பழைய சக்தி நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பார்க்லே மூன்றாவது முறையாக பதவி ஏற்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டால் ஐசிசி அமைப்பில் உள்ள பழைய சக்திகளின் பிரதிநிதிகள் மீட்டிங்கில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) என்ன செய்தார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இனிமேலும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற ஆதங்கத்தாலேயே அவர்கள் இப்படி குறை சொல்வதற்காக விரல் நீட்டுகிறார்கள். கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது. இருப்பினும் அணி வெல்லவில்லையெனில் ஸ்பான்சர்கள் வெளியேறி விடுவார்கள். எனவே பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    Next Story
    ×