என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பெங்களூரு அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பு உள்ளது- கே.எல்.ராகுல்
- நான் யாரிடமும் சென்று கேப்டன் பதவியை கேட்க மாட்டேன்.
- நான் ஒரு நல்ல சூழலை கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுல் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்திற்கு முன்பு அந்த அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. எனவே கே. எல். ராகுல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் கூறும் போது தனக்கு சுதந்திரம் வேண்டும், அணியில் நல்ல சூழ்நிலை வேண்டும் என்றும், இந்திய 20 ஓவர் அணியில் தனக்கு வாய்ப்பு பறிபோக லக்னோ அணியில் சரியான சூழலில் தான் விளையாடாதது தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
2025 ஐ.பி.எல். போட்டியில் விருப்பப்படும் ஐ.பி.எல். அணியில் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன். மெகா ஏலத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். எனது சொந்த மைதானமான பெங்களூருவில் ஆர்.சி.பி. அணிக்காக சின்னசாமி ஸ்டேடியத்தில் சொந்த ரசிகர்கள் முன்பு விளையாடுவற்காக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அன்பும், மரியாதையும் கொண்ட அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆர்.சி.பி. அணியினர் விளையாடி இருந்ததை மிகவும் ரசித்தேன். பெங்களூரு தான் எனது சொந்த ஊர். அங்குள்ளவர்களுக்கு என்னை உள்ளூர் பையன் என்று தெரியும். அங்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
நான் யாரிடமும் சென்று கேப்டன் பதவியை கேட்க மாட்டேன். நான் அதற்கு தகுதியானவன் என்று நீங்கள் கருதி அதை வழங்கினால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் ஒரு நல்ல சூழலை கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அந்த சூழலில் தான் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். மதிக்கப்படுவீர்கள்.
தொடக்க வீரர், மிடில் ஆர்டர், பின்கள வரிசை, விக்கெட் கீப்பிங் என்று எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் எப்போதும் சரியாக இருப்பேன்.
இவ்வாறு கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
32 வயதான பெங்களூரை சேர்ந்த கே.எல். ராகுலின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை 2013-ல் தொடங்கியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2014, 2015-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆடினார். 2016-ல் மீண்டும் ஆர்.சி.பி. அணிக்கு வந்தார். அப்போது அவர் 397 ரன் குவித்து பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக நிகழ்ந்தார். பின்னர் பஞ்சாப் அணிக்கு சென்றார். அங்கு கேப்டன் பொறுப்பு வகித்தார்.அங்கிருந்து தான் லக்னோ அணி அறிமுகம் ஆனபோது அந்த அணிக்கு சென்றார்.
தற்போது கே.எல்.ராகுல் மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்ப இருக்கிறார். அந்த அணி நிர்வாகம் விராட்கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5கோடி) ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்து இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்