search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சகீப் பாய் இல்லையென்றாலும் இந்தியாவை வீழ்த்துவோம்- வங்கதேச வீரர் நம்பிக்கை
    X

    சகீப் பாய் இல்லையென்றாலும் இந்தியாவை வீழ்த்துவோம்- வங்கதேச வீரர் நம்பிக்கை

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து சாகிப் அல் ஹசன் ஓய்வு அறிவித்துவிட்டார்.
    • இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 -0 (2) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    அத்தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் மாநிலத்தில் இருக்கும் குவாலியர் நகரில் துவங்குகிறது.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தங்கள் அணியின் ஜாம்பவான் சாகிப் அல் ஹசனை வங்கதேச அணி மிஸ் செய்யும் என்று அந்நாட்டின் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 என்பது ரன்களை பொறுத்ததாகும். அதில் ஒவ்வொரு அணியும் பெரிய ரன்கள் குவிக்க விரும்புவார்கள். இந்த மைதானத்தில் நீண்ட காலமாக எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. இது புதிய மைதானம். எனவே இங்குள்ள சூழ்நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பயிற்சி ஆடுகளத்தை பார்க்கும் போது பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிகிறது.

    இது போன்ற சூழ்நிலையில் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளும் நடைபெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் அழுத்தம் இருக்கும். ஆனால் அதைப்பற்றி சிந்தித்தால் சிறப்பாக செயல்பட முடியாது. எப்படி அசத்த முடியும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஷாகிப் பாய் இல்லை. அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் அனைவரும் ஒருநாள் சென்றாக வேண்டும். இருப்பினும் அவர் இல்லாமலேயே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறோம்.

    எனக் தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறினார்.

    Next Story
    ×