search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகக் கருதுகிறேன்- வாஷிங்டன் சுந்தர்
    X

    என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகக் கருதுகிறேன்- வாஷிங்டன் சுந்தர்

    • 3-வது இடத்தில் பேட் செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • சில ஆண்டுகளாக நான் எப்படி பேட்டிங் செய்கிறேன் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியை தழுவியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அண்மையில் ரஞ்சி கோப்பையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகக் கருதுகிறேன் என தமிழக வீரர் வாஷிங்டர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது நிர்வாகத்தின் முடிவு. இந்த வாய்ப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நம்பர் 3 இல் பேட் செய்ய இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். மேலும் என்னால் பங்களிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நான் நிச்சயமாக என்னை ஒரு டாப் ஆர்டர் பேட்டராகக் கருதுகிறேன். 3-வது இடத்தில் பேட் செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது. நான் அணியில் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இது ஒரு குழு விளையாட்டாகும்.

    எனது திறமைகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக நான் எப்படி பேட்டிங் செய்கிறேன் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அணி என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது என்பதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.

    Next Story
    ×