search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி
    X

    தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி

    • ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
    • கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. வாஷிங்டன் சுந்தரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×