search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என்ன கம்பீர் இதெல்லாம்.. காண்டான பி.சி.சி.ஐ.. கோச் பதவிக்கு ஆப்பு? - அடுத்து யாருக்கு வாய்ப்பு?
    X

    என்ன கம்பீர் இதெல்லாம்.. காண்டான பி.சி.சி.ஐ.. கோச் பதவிக்கு ஆப்பு? - அடுத்து யாருக்கு வாய்ப்பு?

    • தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
    • கம்பீரின் பறிச்சி முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் முதல் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். கடைசியாக உலகக்கோப்பை வெற்றியோடு ராகுல் டிராவிட் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐபில் தொடரில் கொல்கத்தா அணியை திறமையாக டிரைன் செய்து வெற்றி பெற வைத்ததால் கவுதம் கம்பீர்தான் வேண்டும் என்று பிசிசிஐ அரும்பாடுபட்டு அவரை தலைமை கோச்சாக கொண்டுவந்தது.

    ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.

    இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.

    இந்த நிலையில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 6 மணி நேரம் ஆய்வு நடத்தியது. இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட கம்பீரிடம் இந்த கூட்டத்தில் ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. கம்பீரின் பறிச்சி முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

    வர இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி [BGT] சீரிஸில் இந்தியா தோற்றால் நிச்சயம் கம்பீரின் பதவி பறிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்றும், ஓடிஐ மட்டும் டி 20 போட்டிகளில் மட்டும் கம்பீர் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×