search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி டி20-யிலும் வெற்றி: தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    கடைசி டி20-யிலும் வெற்றி: தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

    • மழைக் காரணமாக ஆட்டம் 13 ஓவராக குறைக்கப்பட்டது.
    • தென்ஆப்பிரிக்கா 108 ரன்கள் அடிக்க, 116 இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் அடித்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

    இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

    4.3 ஓவர் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்டப்ஸ் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், குப்டன் மார்கிராம் 12 பந்தில் 20 ரன்களும், ரிக்கெல்டன் 24 பந்தில 27 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 13 ஓவர் முடிவில 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷெப்பர்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 13 ஓவரில் 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர் அதான்சா 3 பந்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

    நிக்கோலஸ் பூலன் 13 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 35 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 24 பந்தில் 42 ரன்களும், அடுத்து வந்த ஹெட்மையர் 17 பந்தில் 31 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டி20 வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

    இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-0 எனக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×