search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார்
    X

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார்

    • இலங்கை தொடரின்போது கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.
    • கடைசி இரண்டு போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 16-ந்தேதி பெங்களூருவில தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதியும் தொடங்குகிறது.

    இந்தியா தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டிலும் தோல்வியை தழுவியது.

    இந்த தொடரின்போது நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சனுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த காயம் குணமடையாத காரணத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்குப் பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மைக்கேல் பிரேஸ்வேல் முதல் போட்டியில் விளையாடுவார். 2-வது போட்டியின் போது அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்து திரும்பிவிடுவார். அவருக்குப் பதிலாக இஷ் சோதி அணியில் இணைவார்.

    இலங்கையிடம் தோல்வியடைந்த காரணத்தில் டிம் சவுத்தி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் டாம் லாதம் தலைமையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் விளையாடுகிறது.

    Next Story
    ×