search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஆசிய விளையாட்டு- உயரம் தாண்டுதலை தொடர்ந்து கிளப் எறிதலிலும் 3 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாரா ஆசிய விளையாட்டு- உயரம் தாண்டுதலை தொடர்ந்து கிளப் எறிதலிலும் 3 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா

    • F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
    • சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.

    சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.

    ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியது. இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

    அதன்படி, F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். பிரணவ் சூர்மா 30.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் 28.76 மீட்டரும், அமித் குமர் 26.93 மீட்டரும் எறிந்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

    இந்த போட்டியில் மொத்தம் 4 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.

    Next Story
    ×