search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை தோற்கடித்தார் ஜேக் பால்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குத்துச்சண்டை 'ஜாம்பவான்' மைக் டைசனை தோற்கடித்தார் ஜேக் பால்

    • சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு டைசன் திரும்பி உள்ளார்.
    • குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார்.

    முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 குத்துச்சண்டை போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.

    இவரை அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஜேக் பால் (27) எதிர் கொள்கிறார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார். இப்போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.

    8 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் மைக் டைசனை வீழ்த்தினார். தொடக்கத்தில் டைசன், வேகமாக 2 குத்துக்களை விட்டார். நேரம் செல்ல செல்ல ஜேக்பால் விட்ட சரமாரியான குத்துச்சண்டில் டைசன் நிலைகுலைந்தார். 3 நடுவர்களும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை கொடுத்தனர். ஒருவர் 80-72 எனவும், மற்ற இருவர் 79-73 என்றும் புள்ளிகளை வழங்கி இருந்தனர்.

    டைசன் கடைசியாக 2020-ம் ஆண்டு ராய் ஜோன்சுடன் கடைசி போட்டியில் விளை யாடினார். 2005-ம் ஆண் டுக்கு பிறகு அவர் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ போட்டி இதுவாகும்.ஜேக்பால் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் குத்து சண்டையில் பங்கேற்க தொடங்கினார்.

    58 வயதான டைசன் இளம் வீரருடன் போட்டி போடுவது தவறு என பலரும் போட்டிக்கு முன்பே கூறி வந்த நிலையில் போட்டியை பார்த்து ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். வயது மூப்பின் காரணமாக டைசன் கால்களை வேகமாக நகர்த்த முடியாமல் திணறினார்.

    மைக் டைசனுக்கு ரூ.170 கோடி கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்தப் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கு முன்னதாக போட்டோசூட்டுக்காக இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது மைக் டைசன் எதிரணி வீரரான ஜேக் பால் கன்னத்தில் பலார் என அறைந்தார். ஆனால் டைசன் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி பால் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×