என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 6 Oct 2023 4:46 PM IST
மல்யுத்தம் பெண்கள் ப்ரீஸ்டைல் 76 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா- மங்கோலியா மோதின. இதில், 6- 3 என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் கிரண் பிஷ்னோய் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- 6 Oct 2023 4:37 PM IST
ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதியுள்ளன. இதன் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 6 Oct 2023 3:53 PM IST
மல்யுத்தம் பெண்கள் ப்ரீஸ்டைல் 62 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - சீனா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-5 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் சோனம் அபாரமாக வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 62 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் வெண்கலப்பதக்கம் வென்றார்.
- 6 Oct 2023 3:35 PM IST
வில்வித்தை ஆண்கள் ரிகர்வி குழு இறுதிப்போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதின. இதில், 5-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா தங்கப்பதக்கம் வென்றது.
இதனால், போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.
- 6 Oct 2023 1:48 PM IST
செபக்டக்ரா போட்டியின் பெண்கள் ரெகு பிரிவு அரையிறுதியில் இந்திய அணி தாய்லாந்திடம் தோல்வி அடைந்தது. ஆனாலும் வெண்கலப் பதக்கம் பெற்றது.
- 6 Oct 2023 1:40 PM IST
ஆண்கள் கபடி அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61-14 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- 6 Oct 2023 1:31 PM IST
வில்வித்தை ஆண்கள் ரிகர்வ் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா மற்றும் துஷார் பிரபாகர் ஆகியோர் வங்காளதேசத்துடன் மோதினர். இதில் 5-3 என்ற கணக்கில் வென்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- 6 Oct 2023 1:19 PM IST
ஆண்கள் கபடி அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் பாதியில் 30-5 என முன்னிலை பெற்றுள்ளது.
- 6 Oct 2023 12:21 PM IST
வில்வித்தை ஆண்கள் ரிகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா மற்றும் துஷார் பிரபாகர் ஆகியோர் மங்கோலிய அணியுடன் மோதினர். இதில் ஷூட் அவுட் முறையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்