search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • முதல் கேம்-ஐ பி.வி. சிந்து 21-5 என 14 நிமிடங்களில் எளிதில் கைப்பற்றினார்.
    • 2-வது கேம்-ஐ 21-10 என 19 நிமிடங்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வீராங்கனை பி.வி. சிந்து "எம்" பிரிவில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று எஸ்தோனியா வீராங்கனை கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார்.

    முதல் கேம்-ஐ பி.வி. சிந்து 21-5 என எளிதில் கைப்பற்றினார். 2-வது கேம்-ஐயும் பி.வி. சிந்து 21-10 என கைப்பற்றினார். இதனால் 2-0 என எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முன்னேறினார்.

    பி.வி. சிந்துவுக்கு முதல் கேம்-ஐ கைப்பற்ற 14 நிமிடங்களும், 2-வது கேம்-ஐ கைப்பற்ற 19 நிமிடங்களும் தேவைப்பட்டது. மொத்தமாக 34 நிமிடத்தில் பி.வி. சிந்து எஸ்தோனியா வீராங்கனையை வீழ்த்தினார்

    முதல் போட்டியில் மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என வீழ்த்தியிருந்தார்.

    • இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
    • நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதினார்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     

     

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை" என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.

     

    நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

    • பி.வி. சிந்து (இந்தியா)- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி.
    • ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 6-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    துப்பாக்கி சுடுதல்:-

    ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று), பகல் 12 30 மணி.

    பேட்மிண்டன்:-

    பி.வி. சிந்து (இந்தியா)- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி. லக்ஷயா சென் (இந்தியா)- ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா) பிற்பகல் 1.40 மணி, எச்.எஸ். பிரனாய் (இந்தியா), டக் பாட் லீ (வியட்நாம்), (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று), இரவு 11 மணி.

    டேபிள் டென்னிஸ்:-

    ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    குத்துச்சண்டை:-

    லவ்லினா போர்கோஹைன் (இந்தியா)- சன்னிவா ஹாப்ஸ்டட் (நார்வே) (பெண்கள் 75 கிலோ தொடக்க சுற்று), மாலை 3.50 மணி. நிஷாந்த் தேவ் (இந்தியா)- ஜோஸ் கேப்ரியல் (ஈகுவடார்) (ஆண்கள் 71 கிலோ 2-வது சுற்று), நள்ளிரவு 12.34 மணி.

    வில்வித்தை:-

    தீபிகா குமாரி (இந்தியா)- ரீனா பர்னாட் (எஸ்தோனியா), (பெண்கள் தனிநபர் பிரிவு) மாலை 3.56 மணி. தருண்தீப் ராய் (இந்தியா)- டாம் ஹால் (இங்கிலாந்து) (ஆண்கள் தனிநபர் பிரிவு) இரவு 9.28 மணி.

    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
    • ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் கோல் மழையால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்-முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியின் 2 கோல்களையும் ஹர்மன்பிரித் சிங் அடித்து அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இந்த இரண்டு கோல்களையும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அடித்தார்.

    இதன்மூலம் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறினார்.
    • மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார்.

    முதல் செட்டில் 1-1 என சமனிலை வகித்தது. 2வது செட்டில் 3-1 என இந்தோனேசிய வீராங்கனை முன்னிலை வகித்தார். 3வது செட்டில் 3-3 என சமனிலை வகித்தனர். 4வது செட்டில் பஜன் கவுர் 5-3 என முன்னிலை பெற்றார். 5வது செட்டில் 7-3 என கைப்பற்றி வென்றார்.

    இதன்மூலம் ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்/

    • 1000 மீட்டரை 3 நிமிடம் 29.34 வினாடியில் கடந்தார்.
    • இலக்கை 7 நிமிடம் 5.10 வினாடியில் எட்டினார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

    இன்று நடைபெற்ற காலிறுதியில் போட்டியில் 4-வது பிரிவில் இவருடன் மேலும் 6 பேர் கலந்து கொண்டனர். 2000 மீட்டர் தொலைவை துடுப்பு போட்டு கடக்க வேண்டும். பால்ராஜ் பன்வார் முதல் 500 மீட்டரை ஒரு நிமிடம் 42.28 வினாடியில் கடந்தார். 1000 மீட்டரை 3 நிமிடம் 29.34 வினாடியில் கடந்தார்.

    1500 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் 17.22 வினாடிகளில் கடந்தார். 2000 மீட்டர் அதாவது இலக்கை 7 நிமிடம் 5.10 வினாடிகளில் எட்டினார். இதன்மூலம் காலிறுதி 4-ல் 5-வது இடம் பிடித்து அரையிறுதி (C/D) சுற்றுக்கு முன்னேறினார். நாளை அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
    • மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.


    இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
    • இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.

    இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!

    மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    • இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

    இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார். 

    அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த ரமீதா 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் 145.3 புள்ளிகளை பெற்றார்.

    இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    • டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
    • கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

    இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32  சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 

    • பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடங்கினர்.
    • தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille]  உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது. 

    ×