search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • ஆடவர் ஹாக்கி லீக் சுற்று போட்டியில் அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொள்கிறது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் அர்ஜூன் பாபுதா பங்கேற்கிறார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    பேட்மிண்டன்:

    ஆண்கள் இரட்டையர் லீக் சுற்று : சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி (இந்தியா) - மார்க் லாம்ஸ்பஸ்- மார்வின் சிடெல் (ஜெர்மனி), பகல் 12 மணி.

    பெண்கள் இரட்டையர் லீக் சுற்று : தனிஷா கிரஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா (இந்தியா) - நமி மேட்சுயமா- சிஹாரு ஷிட்டா (ஜப்பான்), பகல் 12.50 மணி.

    ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று : லக்ஷயா சென் (இந்தியா)- ஜூலியன் கராக்கி (பெல்ஜியம்), மாலை 5.30 மணி.

    துப்பாக்கி சுடுதல்:

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று : சரப்ஜோத் சிங்- மனு பாக்கர், அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான், பகல் 12.45 மணி.

    ஆண்களுக்கான டிராப் பிரிவு தகுதி சுற்று : பிரித்விராஜ் தொண்டைமான், பகல் 1 மணி.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: ரமிதா ஜிண்டால், பகல் 1 மணி.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: அர்ஜூன் பாபுதா, மாலை 3.30 மணி.

    ஹாக்கி:

    ஆடவர் லீக் சுற்று: இந்தியா- அர்ஜென்டினா, மாலை 4.15 .

    வில்வித்தை:

    ஆடவர் அணிகள் பிரிவு காலிறுதி : தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ரமேஷ் ஜாதவ், மாலை 6.30 மணி.

    டேபிள் டென்னிஸ்:

    பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று: ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), இரவு 11.30 மணி.

    • பி.வி.சிந்து ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
    • டென்னிசில் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

    பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார்.

    • முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் இன்று ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல்- பிரெஞ்சு வீரரான கொரெண்டின் மௌடெட் உடன் மோதினார்.

    முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். யாரு வெற்றி பெறுவார் என்ற நிலையில் 3-வது சுற்று நடைபெற்றது. பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதனால் 6-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை மௌடெட் வீழ்த்தினார். இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் 28 நிமிடங்களில் நடைபெற்றது. 

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதினார். இதில் பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா பங்கேற்றார்.

    இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

    நாளை மதியம் 3.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
    • குத்துச்சண்டையின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பதக்கம் வென்றது குறித்து மானு பாகெர் கூறியதாவது:

    டோக்கியோவிற்குப் பிறகு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதைக் கடக்க எனக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. வெளிப்படையாகச் சொன்னால், இன்று நான் எவ்வளவு நன்றாக உணர்கிறேன் என்பதை என்னால் விளக்க முடியாது.

    என்னிடமுள்ள முழு ஆற்றலுடன் நான் போராடினேன். நான் வெண்கலத்தை வென்றதற்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

    நான் பகவத் கீதையைப் படித்தேன், நான் செய்ய வேண்டியதை எப்போதும் செய்ய முயற்சித்தேன். எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது என தெரிவித்தார்.

    • துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மன் வீராங்கனையை எதிர்கொண்டார்.

    இதில் நிகாத் ஜரின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 28 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்துக்கு முன்னேறினார்.

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • இன்று டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார்.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் அகுளா 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான இளவேனில் மற்றும் ரமிதா ஜிண்டால் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இதில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் 10-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

    • இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் டிராக் கிவீன் நிகழ்ச்சி அமைந்தது
    • அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மேசையில் மீது படுத்திருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தொடக்கவிழா அணிவகுப்பு, வாணவேடிக்கை கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டது.

    அந்த வகையில் ஐபில் கோபுரத்தின் முன்னாள் சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாகப் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் 'Last Supper' எனப்படும் இயேசுவின்  இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

     

     

     

    அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக்கொண்டு , லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் விதமாக மேஜையில் படுத்திருந்தார். மேஜைக்கு பின்னால் உணவருந்தும் பாணியில் டிராக் குவீங்கள் எனப்படும் பெண்கள் அமர்த்திருந்தனர்.

    LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் பாலின சமத்துவத்தோடு கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைத்துள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி பாலினத்தை மையப்படுத்தி விரசமான முறையில் அமைந்துள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

    குறிப்பாக வலதுசாரி சிந்தனைகளுடைய தொழிலதிபர் எலான் மஸ்க், பாஜக எம்.பி கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சிக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். கங்கனா ரனாவத் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஏன் பாலினத்தை அவரவர் படுக்கையறையோடு மட்டும் வைத்துக்கொள்ள கூடாது என்று கேள்வியெழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார். 

     

     

    • தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
    • இன்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் பன்வார் பன்வார் முன்னிலையில் இருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்தார்.

    4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.

    இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை கடந்து 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார் பல்ராஜ் பன்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பன்வார் முன்னிலையில் இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் மொனாக்கோ வீரர் குவென்டின் அடோஃனெல்லி [Quentin Antognelli] அவரை முந்தியதால் இரண்டாம் இடத்திற்கு பன்வார் சென்றார். இதனைத்தொடர்ந்தே மொனாக்கோ மற்றும் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×