search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பி.வி.சிந்து ஏற்கனவே 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.

    இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

    ஜூலை 31 ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

    பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் நழுவியது

    இத்தாலிய உயரம் தாண்டுதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜியான்மார்கோ தாம்பெரி [ Gianmarco Tamberi] நேற்று தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளார். இத்தாலி நாட்டின் சார்பில் நேற்று முன் தினம் இரவு செய்ன் நதி [Seine River] மீது படகில் நடந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இத்தாலிய கோடியை அவர் ஏந்திச்சென்றார்.

     

    இந்நிலையில் அன்றைய இரவு தனது திருமண மோதிரத்தை செய்ன் நதியில் அவர் தொலைத்துள்ளார். அதற்கு அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனுஷன் என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கிறார் என்று இணையவாசிகள் மனம் நெகிழ்ந்து வருகின்றனர்.

     

    மோதிரத்தை தொலைத்ததற்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள இன்ஷ்டாகிராம் பதிவில், 'என்னை மன்னித்துவிடு அன்பே, இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் [என் கை விரலில் இருந்து] நழுய தருணத்தில் [அது படகின் உள்ளே விழுந்துவிடும் எடுத்துக்கொள்ளலாம்] என்று ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது.

    ஆனால் அது கீழே விழுந்து தவறான திசையில் எகிறி நதிக்குள் சென்றது. எதோ அது அங்கு தான் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல் இருந்தது. சில கணம் நான் உறைந்து நின்றேன். ஆனால் இது நடந்துதான் தீரும் என்றால் இந்த நதியை விட சிறந்த ஒரு இடத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடியாது. காதலின் நகரமான பாரிசில் உள்ள இந்த நதிப்படுகையில் அது [மோதிரம்] என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

     

    நேற்று நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் ஒரு கவித்துவமான தன்மையும் இணைந்தே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ விரும்பினால் உனது மோதிரத்தையும் இந்த நதியில் வீசி விடலாம். அவ்வாறாக இருவரின் மோதிரங்களும் நதியில் ஒன்று சேரும். இதில் இன்னொரு நன்மையும் உள்ளது, நீ அடிக்கடி என்னிடம் கேட்பதுபோல், நாம் உறுதிமொழி கூறி புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ளலாம்' என்று எழுதியுள்ளார். 

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் போட்டியில் வெற்றி.
    • கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி மோதியது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடியை வீழ்த்தியது.

    தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா ஜோடி உடன் மோத உள்ளது.

    அதே சமயம் நேற்று நடந்த பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
    • கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலேயே இவ்வாறு நடந்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

     

    ஆதவாது பிரான்ஸ் பாலினீசிய தீவுகளில் ஒன்றான தஹிட்டி[Tahiti] தீவின் கடல் பகுதியில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது மற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் பாரிஸ் நகரில் இருந்து சுமார் 15,715 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யம். கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் அரங்கில் இருந்து இவ்வளவு தொலைவில் ஸ்வீடனில் வைத்து குதிரையேற்ற போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.

     

    அதன்பிறகு தற்போது 15,715 கிலோமீட்டர் தொலைவில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸ் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகளைப் பரப்பும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஹிட்டி தீவில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டங்கள் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. இந்த வருட ஒலிம்பிக்ஸ் சர்ஃபிங் போட்டிகளில் 24 வீரர்கள் மற்றும் 24 வீராங்கனைகள் என மொத்தம் 48 சர்ஃபர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இன்று மனு பாகெர் பங்கேற்கிறார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    துப்பாக்கி சுடுதல்:

    பெண்களுக்கான10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று : இளவேனில், ரமிதா ஜிண்டால், பகல் 12 45 மணி.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று : அர்ஜூன் பாபுதா, சந்தீப் சிங், பிற்பகல் 2 45 மணி.

    பெண்களுக்கான10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: மனு பாகெர், மாலை 3 30 மணி.

    பேட்மிண்டன்:

    பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று : பி.வி.சிந்து (இந்தியா) -பாத்திமா நபாஹா (மாலத்தீவு), பகல் 12.50 மணி.

    ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று : எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) - பாபியன் ரோத் (ஜெர்மனி), இரவு 8 மணி.

    துடுப்பு படகு:

    ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரிபிசாஜ் சுற்று : பால்ராஜ் பன்வார், பகல் 1.06 மணி,

    டேபிள் டென்னிஸ்:

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று : ஸ்ரீஜா அகுலா (இந்தியா) - கிறிஸ்டினா கால்பெர்க் (சுவீடன்), பிற்பகல் 2 15 மணி.

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று : சரத் கமல் (இந்தியா) - டெனி கொஜூல் (சுலோவேனியா), மாலை 3 மணி.

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று : மணிகா பத்ரா (இந்தியா) - அன்னா ஹூரேசி (இங்கிலாந்து), மாலை 4 30 மணி.

    நீச்சல்:

    ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று : ஸ்ரீஹரி நடராஜ் பிற்பகல் 2 30 மணி.

    பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று : தினிதி தேசிங்கு, பிற்பகல் 2 30 மணி.

    டென்னிஸ்:

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று : சுமித் நாகல்-கோரென்டின் மவுடெட் (பிரான்ஸ்), மாலை 3 30 மணி.

    ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று 1 - ரோஹன் போபண்ணா-என் ஸ்ரீராம் பாலாஜி vs கேல் மான்ஃபில்ஸ்/எட்வர்ட் ரோஜர்-வாசெலின் (பிரான்ஸ்) - பிற்பகல் 3 30 மணி.

    குத்துச்சண்டை:

    பெண்கள் 50 கிலோ எடைபிரிவு தொடக்க சுற்று :நிகாத் ஜரீன் (இந்தியா)-மேக்சி கரினா கோட்ஜெர் (ஜெர்மனி), மாலை 3.50 மணி.

    வில்வித்தை:

    பெண்கள் அணிகள் பிரிவு கால்இறுதி : அங்கிதா பகத், தீபிகா குமாரி, பஜன் கவுர் , மாலை 5 45 மணி.

    • முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
    • ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் இரவு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் பாரிஸ் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் போட்டிகளுடன் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

    அந்த வகையில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 6 விண்வெளி வீரர்கள் மினி ஒலிம்பிக் தீப்பந்த ஜோதி போன்ற  பொம்மையை ஏந்தியும் பளு தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விலையுவது போன்றும்  அவர்கள் பாவனை செய்து மகிழும் 2 நிமிட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவர் என்று திட்டமிடப்பட்ட நிலையில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக பூமி திருப்ப முடியாமல் அவர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
    • ஹாக்கி ஆடவர் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளது.

    ஹாக்கி ஆடவர் பி பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா,அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா அணியும் இடம் பெற்றுள்ளது

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில் 3 -2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

    மந்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    • பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென்னும், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், ஜோர்டான் வீரர் அபோயமானுடன் மோதினார்.

    இதில் தேசாய் 11-7, 11-9, 11-5, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானை

    21-8, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிக்கு முன்னேறினார்.
    • முதல் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-8 என எளிதில் வென்றார். 2வது செட்டில் கெவின் கடும் போராட்டம் அளித்தார். இதனால் முதலில் பின்தங்கிய லக்ஷயா சென், அடுத்து அதிரடியாக ஆடி 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
    • ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.

    ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, பிரான்சில் தொடங்கிய ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் கொரிய அணி அறிமுகத்திற்காக படகில் வந்து கொண்டிருந்த போது, அறிவிப்பாளர் பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரில் அறிமுகப்படுத்தினார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் இன்னும் நடந்து வருவதால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தென் கொரியாவின் விளையாட்டு அமைச்சகத்திடம் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பத்தை ஒப்புக்கொண்டதுடன் வருத்தமும் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், கொரிய மொழியில் மன்னிப்பு கோரியுள்ளது.

    அதில், அறிமுக விழாவில் தென் கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    ×