search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • ஒரு கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.

    போதைப்பொருள் விற்பனையாளரிடம் இருந்து கோகைன் போதைப்பொருள் வாங்கியதாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு) கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் அவரை கைது செய்தபோது ஒரு கிராம் போதைப்பொருள் கையில வைத்திருந்தார். புதன்கிழமை காலை வரை அவரை காவலில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மாத்திரை வடிவிலான போதைப்பொருள், கோகைன் போதைப்பொருள் வைத்திருந்த விற்பனையாளர் (வயது 17) கைது செய்யப்பட்டுள்ளார்.

    விற்பனையாளரிடம் அதிகப்படியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.

    செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட டாம் கிரேக், புதன்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி பதில் கூற மறுத்துள்ளது.

    • புள்ளிகள் ஏதும் எடுக்காமல் டெக்னிக்கல் முறையில் தோல்வியை தழுவினார்.
    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இன்று மல்யுத்தத்தில் இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அன்திம் துருக்கி வீராங்கனை ஜெய்னெப் யெட்கில்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அன்திம் 0-10 என டெக்னிக்கல் சுப்ரியாரிட்டி அடிப்படையில் தோல்வியை தழுவினார்.

    இதன்மூலம் இன்றைய மல்யுத்த போட்டி இந்தியாவுக்கு ஏமாற்றம் அடைவதாக இருந்தது. மற்றொரு வீராங்கனையான வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இன்று இரவு இறுதிப் போட்டியில் மோத இருந்தார். ஆனால் 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனால் மல்யுத்தம் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது.

    • வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
    • வினேஷ் போகத்த்தை சந்தித்து பி.டி. உஷா பேசினார்.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில், "வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் வில்லேஜ் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள போகத்த்தை சந்தித்து பேசினேன். இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்திய அரசாங்கமும் அவளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். நாங்கள் வினேஷ் போகத்திற்கு அனைத்து மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்குகிறோம்.

    வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முறையீடு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

    • முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
    • 2-வது மேட்சில் மணிகா பத்ரா 1-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.

    முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி ஜெர்மனியின் ஜியாவோனா ஷான்- யுயன் வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.

    2-வது மேட்சில் மணிகா பத்ரா- ஜெர்மனியின் அன்னெத் கவ்மான் மோதினார்கள். இதில் மணிகா பத்ரா 1-3 எனத் தோல்வியடைந்தார்.

    3-வது மேட்சில் அர்ச்சனா கிரிஷ் கமத்- ஜியாவோனா ஜோடி விளையாடியது. இதில் அர்ச்சனா 3-1 என வெற்றி பெற்றார்.

    4-வது போட்டியில் ஸ்ரீஜா அகுலா- அன்னெட் கவ்மான் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்ரீஜா 0-3 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.

    தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்ர் தடை ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி ஏமாற்றம் அடைந்தார்.

    • ஸ்பெயின் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
    • ஈகுவடார் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    பாரீஸ் ஒலிம்பிக்கின் தடகள போட்டியில் இன்று காலை கலப்பு அணிகள் பிரிவுக்கான மாரத்தான் நடை பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஜோடி கலந்து கொண்டது.

    மொத்தம் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயின் ஜோடி அல்வாரோ மார்ட்டின்- மரியா பெரேஸ் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.

    ஈகுவடாரின் பிரையன் டேனியல் பின்டாடோ- கிளென்டா மோர்ஜோன் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    ஆஸ்திரேலியாவின் ரிடியான் கவ்லே- ஜெமிமா மோன்டேஜ் ஜோடி 2 மணி நேரம் 51 நிமிடம் 38 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.

    இந்திய ஜோடி பந்தய தூரத்தை எட்ட முடியாமல் இடையிலேயே வெளியேறி கடைசி இடத்தை பிடித்தது. அதேபோல் செக்குடியரசு ஜோடியும் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறியது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • கியூப வீராங்கனை இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

    அதே சமயம் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக முறையீடு செய்துள்ளதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • உங்களின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேசத்தை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளது.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேதனையுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஒலிம்பிக்ஸில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது. உங்களின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேசத்தை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளது. உங்களின் எண்ணற்ற சாதனைகள், இந்தியாவிற்கு நீங்கள் கொண்டு வந்த பெருமையை இந்த சம்பவம் மறக்கடித்துவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உறுதியாக இருங்கள் வினேஷ். உங்களையும் உங்கள் பயணத்தையும் நாங்கள் நம்புகிறோம். நீங்கள் எப்போதும் எங்கள் சாம்பியனாக இருப்பீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைந்ததாக தகவல்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    அதிகரித்த உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச்சுடுதலில் பிரிவில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றெடுத்த வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பியுள்ளார். ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மனுவின் குடும்பத்தினர் உட்பட 100 கணக்கானோர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில் விமானமானது ஒரு மணி நேரம் தாமதமாகி 9.20 மணிக்கு தரையிறங்கியது.

    தொடர்ந்து மனு பாக்கருக்கும் அவருடன் வந்த பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களின் வரவேற்பினால் நெகிழ்ந்த மனு பாக்கர், இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் 10m ஏர் பிரிஸ்டல் துப்பாக்கிச்சூடுதல் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், 10m பிரிஸ்டல் இரட்டையர் பிரிவில் சரபோஜித் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
    • வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி விட்டது. இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
    • இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

    துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.

    இதனால் இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

     


    இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர். இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது.

    போட்டி முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், இந்திய அணி கோல்கீப்பர் ஸ்ரீஜீஷ் வெளியேறினார். அவருககு பதிலாக மற்றொரு வீரர் அந்த இடத்திற்கு வந்தார். ஜெர்மணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற இந்திய வீரர்கள் கோல்கீப்பர் இல்லாமல் போராடினர். கடைசி நிமிடத்தில் பந்து இந்திய வீரர்கள் வசம் வந்தது.

    அதனை லாவகமாக மறுபுறம் கொண்டு சென்றனர். இக்கட்டான சூழலில் பந்தை எதிர்கொண்ட ஷாம்ஷெர் சிங் அதனை கோல் போஸ்ட் நோக்கி வேகமாக அடித்தார். எனினும், பந்து போஸ்ட் வெளியே கடந்து சென்றது. இதனால் இந்திய அணியின் மூன்றாவது கோல் அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதோடு போட்டியிலும் நேரம் முடிந்ததால், ஜெர்மனி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்
    • வினேஷை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார்.

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தங்கம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2.30 அளவில் நடக்க உள்ளது.

     

    முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். அவர் உள்ளிட்ட மற்றைய வீரர்கள் மீது கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

     

    இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடன் களத்தில் நின்று போராடிய சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது சமூக வலைதள பக்கத்தில், 'பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், அவர் மீண்டும் 'இந்தியாவின் மகள்' ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

     

    முன்னதாக நேற்று மதியம் நடந்த காலிறுதி போட்டியில் வினேஷ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பஜ்ரங் புனியா வெளியிட பதிவில்,'பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.  

     

    ×