search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மோடி வாழ்த்து
    X

    உலக மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மோடி வாழ்த்து

    • நம்முடைய மல்யுத்த போட்டியாளர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர் என பிரதமர் மோடி வாழ்த்து
    • மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூர், பஜ்ரங் பூனியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    புதுடெல்லி:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று உள்ளனர்.

    அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நம்முடைய மல்யுத்த போட்டியாளர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் பெல்கிரேடு நகரில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். வினேஷ், இந்த தளத்தில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும், பஜ்ரங் 4-வது பதக்கமும் வென்றுள்ளது சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.

    இதேபோன்று, மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூர், பஜ்ரங் பூனியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் வெண்கலம் வென்றுள்ளார். 2018-ம் ஆண்டில் வெள்ளி, 2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வெண்கல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இதேபோன்று, மகளிருக்கான 53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் வினேஷ் வெண்கலம் வென்றுள்ளார். இது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற 2-வது பதக்கம் ஆகும்.

    Next Story
    ×