search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
    • இதில் ரூப்லேவை வீழ்த்தி சின்னர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
    • இதில் ரிபாகினா வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் ரிபாகினா மோதுகிறார்.

    • போட்டியில் டெனில் மெத்வதேவ் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கார்பலேசை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
    • போட்டியில் ரைபகினா 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் படோசாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ் பேனாவுடன் மோதினார்.

    இந்த போட்டியில் டெனில் மெத்வதேவ் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கார்பலேசை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார்.

    இந்த போட்டியில் ரைபகினா 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் படோசாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • ரைபகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கலின்ஸ்கயாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
    • லினெட் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைபகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கலின்ஸ்கயாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், ரஷியாவின் எவ்ஜெனியா ரோடினாவுடன் மோதினார். இந்த போட்டியில் லினெட் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
    • பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றினார்.

    அமெரிக்காவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் டஸன் லாஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    மற்ற ஆட்டங்களில் பாகுன்டோ பாக்னிஸ் (அர்ஜென்டினா), பிரன்டன் நகாஷிமா (அமெரிக்கா), எமிலியோ நவா (அமெரிக்கா), குய்டா பெல்லா (அர்ஜென்டினா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன்களான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா)-எம்மா ரடுகானு (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    2 மணி 33 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் சோபியா கெனின் (அமெரிக்கா), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முசோவா (செக்குடியரசு), ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரபேல் நடால் தற்போது 13-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

    லண்டன்:

    அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார்.

    இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இந்த தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார். நோவக் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.

    சிட்சிபாஸ் மூன்றாமிடமு, காஸ்பர் ரூட் நான்காம் இடமும், மெத்வதேவ் 5ம் இடமும் பிடித்துள்ளனர்.

    தரவரிசையின் முதல் 10 இடன்களில் இருந்து முதல் முறையாக ரபேல் நடால் வெளியேறியுள்ளார். அவர் தற்போது 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இதில் மெத்வதேவை வீழ்த்திய அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் அல்காரஸ் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
    • இதில் ரிபாகினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்தித்தார்.

    இதில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரிபாகினா வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே- பிரிட்டனின் நியல் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயைக்கும் மூன்றாவது செட்டை 10-8 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்துள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் இறுதிக்கு முன்னேறினர்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
    • நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், இத்தாலி வீரர் சின்னரை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசமெவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காராஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சின்னருடன் மோத உள்ளார்.

    ×