search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பகுதியில் போலி 500 ரூபாய் நோட்டு வியாபாரிகள் அதிர்ச்சி
    X

    எடப்பாடி பகுதியில் போலி 500 ரூபாய் நோட்டு வியாபாரிகள் அதிர்ச்சி

    எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் போலி 500 ரூபாய் நோட்டு வந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எடப்பாடி:

    கடந்த நவம்பர் மாதம் முதல் மத்திய அரசு புழக்கத்தில் உள்ள உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற நிலையில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

    இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் வடிவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் முழுமையான விழிப்புணர்வு வராத நிலையில் எடப்பாடி பகுதியில் புதிய ரூபாய் நோட்டு வடிவில் அச்சிடப்பட்ட போலி 500 ரூபாய் நோட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள தினசரி மார்கெட் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அதிகாலை நேரத்தில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்குவரும் எடப்பாடி சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை அதிகாலை நேரத்தில் வாங்கி செல்வது வழக்கம்.

    போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் வியாபாரம் நடைபெறும் தினசரி மார்கெட்டின் சுங்க வசூல் குத்தகைதாராக இருந்து வரும் ஜீவானந்தத்திடம் ஒருவர் 500ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார்.

    அவரிடம் இருந்த 500ரூபாய் நோட்டினை வாங்கி பார்த்த ஜீவானந்தத்திற்கு அந்த நோட்டின் மீது சந்தேகம் வந்து உற்று பார்த்த போது அது வழக்கமாக உள்ள 500 ரூபாய் நோட்டிலிருந்து மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதால் அதை வாங்க மறுத்த ஜீவானந்தம் அந்த நோட்டினை பற்றி அதை கொடுத்தவரிடம் விசாரித்தபோது தான் எடப்பாடியை அடுத்துள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி என்றும் தனது பெயர் சீரங்கன் என்றும் தான் எடப்பாடியை அடுத்துள்ள புதுபாளைம் பகுதியில் மீன் வியாபாரம் செய்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இந்த நோட்டினை கொடுத்து மீன் வாங்கி சென்றதாகவும் படிப்பறிவு இல்லாத தன்னால் இந்த நோட்டின் உண்மை தன்மை குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

    அதிகாலை வேலையில் போலியான 500 ரூபாய் நோட்டு வந்தததை அடுத்து அப்பகுதி வியாபாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி இதுபோல மர்ம நபர்கள் போலியான 500ரூபாயினை மாற்ற கூடும் என்ற அச்ச உணர்வுடன் தாங்கள் வியாபாரம் செய்வதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×