என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்
Byமாலை மலர்3 Aug 2018 1:47 PM IST (Updated: 3 Aug 2018 11:18 PM IST)
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரி ஆவார்.
இவரது வீட்டில் நேற்று முன்தினம் 16 பவுன் நகை, ரூ.13 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் திருடு போனது. மேலும் ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த திருட்டு வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டன் (30) என்பவரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விசாரணை கைதி மணிகண்டன் மர்மமான முறையில் போலீஸ் நிலையத்திலேயே இறந்தார்.
அவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்ததுடன் நுழைவுவாயில் கதவை பூட்டினர். மேலும் உறவினர்களிடம் எந்தவித தகவலும் கூற மறுத்துவிட்டனர்.
இறந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினர். மேலும் முதுகுளத்தூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் முதுகுளத்தூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×