search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி
    X

    ராஜபாளையத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

    ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண் பன்றி காய்ச்சலுக்கு பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது62). சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட மாரியம்மாள் ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    காய்ச்சல் குணமாகாததால் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாரியம்மாளின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    டாக்டர்கள் குழுவினர் மாரியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மலையடிப்பட்டி பகுதிக்கு சென்று சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட சுகாதார துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இது வரை 5 பேர் பலியாகி உள்ளனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 462 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 152 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதுதவிர 8 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டு, பன்றி-டெங்கு காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Swineflu #Dengue

    Next Story
    ×