search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொடைக்கானலில் வானில் தோன்றிய வால் நட்சத்திரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்
    X

    கொடைக்கானலில் வானில் தோன்றிய வால் நட்சத்திரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

    கொடைக்கானலில் வானில் தோன்றிய அதிசய நிகழ்வான வால் நட்சத்திரத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

    கொடைக்கானல்:

    விண் வெளியில் அவ்வப்போது வால் நட்சத்திரங்களின் நகர்வு இருப்பது வழக்கம். தற்போது 46பி விர்ட்டியன் வால் நட்சத்திரம் பூமி பாதையில் நகர்ந்தது.

    இந்நிகழ்வு கடந்த 16-ந் தேதி முதல் வானில் தோன்றும் என்றும் இதனை சாதாரண கண்களால் பார்க்கலாம் என்றும் கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பனி மற்றும் மேக மூட்டம் அதிக அளவில் இருந்ததால் முதல் நாள் வானமே தெரியாத நிலை ஏற்பட்டது.

    17-ந் தேதி அன்று வானம் தெளிவான நிலையில் இருந்தது. அதன்பின்னர் வால் நட்சத்திரம் சிறிது நேரம் தோன்றி விட்டு மறைந்தது. 3-வது நாள் தெளிவாக தெரிந்தது.

    பூமிக்கு அருகில் வடகிழக்கு திசையில் நீல வண்ணத்தில் சுடர்விட்டு நகர்ந்த இதனை தொலைநோக்கு கருவி இன்றி சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

    இது குறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சியாளர் கூறியதாவது:-

    தற்போது தென்பட்ட வால் நட்சத்திரம் கார்ல் விர்ட்டியன் என்பவர் 1948-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இது ஜூபிட்டர் என்னும் வியாழன் குடும்பத்தை சேர்ந்தது. இதனுடைய விட்டம் 600 மீட்டர் ஆகும்.

    1950-க்கு பிறகு பூமிக்கு வரக்கூடிய வால் நட்சத்திரங்களின் தொலைவில் இது 10-வது குறைந்தபட்ச தொலைவாகும். இந்த நட்சத்திரம் கடந்த 15-ந் தேதி பூமியில் இருந்து 0.078 வானவியல் அலகு தூரத்தில் வந்தது. இது பூமியில் இருந்து சந்திரனின் தொலைவை போல 30 மடங்காகும். இனி அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகுதான் இதுபோன்று பிரகாசமாக தெரியும்.

    பெய்ட்டி புயல் காணரமாக வானில் 2 நாட்கள் அதிக அளவு மேக மூட்டம் இருந்ததால் இதனை பெரும்பாலானோர் காண முடியவில்லை. இருந்தபோதும் 3-வது நாள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் டெலஸ் கோப் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை கண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×