search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தந்தை-மகன் மண்டை உடைப்பு
    X

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தந்தை-மகன் மண்டை உடைப்பு

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் தந்தை- மகன் மண்டை உடைக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை வேலாயுதம் பாளையம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது63). இவரது மகன் வரதராஜன் (31). இவர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாக்கு வாதம் செய்தனர். இன்றும் பிரச்சினை தொடர்ந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பிச்சைமுத்து மற்றும் வரதராஜனை கடுமையாக தாக்கியதில் இருவரது மண்டையும் உடைந்து ரத்தம் பீறிட்டது. ரத்தம் சொட்ட சொட்ட வடமதுரை போலீசில் புகார் அளிக்க வந்த தந்தை-மகனை போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×