என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காந்தியின் உருவபொம்மை அவமதிப்பு- மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ
Byமாலை மலர்12 Feb 2019 5:01 PM IST (Updated: 12 Feb 2019 5:01 PM IST)
திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா மேடையில் காந்தியின் உருவபொம்மை அவமதிக்கப்பட்டது குறித்து பேசிய வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். #Vaiko
திருச்சி:
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறையும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து இஸ்லாமும் தமிழும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கும் ஆற்றியவை குறித்து பேசினார். மேலும் அவர் பேசும் போது, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை சுட்டு கொண்டாடியது தனது மனதை மிகவும் உருக்கியது என்று, பேசி கொண்டிருக்கும் போது, திடீரென அவர் கண்கள் கலங்கி கதறி அழுதார். காந்தியின் உருவத்தை சித்தரித்த விதம் குறித்தும் கண் கலங்கியபடி கூறினார்.
மேலும் நான் ஓர் போராளி என்றும், எனக்கு தோல்வியே கிடையாது என்றார். ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக, நாட்டில் மதச்சார்பின்மையை நிலை நாட்டுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன். மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது என்றார். #Vaiko

Next Story
×