என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
Byமாலை மலர்25 Dec 2020 2:03 PM IST (Updated: 25 Dec 2020 2:03 PM IST)
நெல்லையைச் சேர்ந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லையைச் சேர்ந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் (வயது 73) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
மரணம் அடைந்த தொ.பரமசிவன் பாளை தெற்கு பஜார் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ள தொ.பரமசிவன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவரது ஆராய்ச்சிக்காக பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லையில் உள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய பொறுப்பாளராகவும் இருந்தார். ‘அழகர் கோவில்’ ‘அறியப்படாத தமிழகம்’ ‘பண்பாட்டு அசைவுகள்’ உள்ளிட்ட 14-க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மறைந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் உடலுக்கு இன்று அவரது வீட்டில் இறுதி அஞ்சலி நடந்தது. பின்னர் நடந்த அவரது உடல் அடக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தொ.பரமசிவன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது டுவிட்டில் அடங்காத துயரம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ் பண்பாட்டு மரபுகளை அசைக்க முடியாத, அழுத்தமான ஆவணங்களை படைத்தவர் அவரது நூல்கள் ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுக்கொண்ட தொ.பரமசிவன், பெரியார் சிந்தனைகள் தமிழகத்தின் விடியலுக்கு எல்லா காலத்திற்கும் தேவை என்பதை இறுதி மூச்சு அடங்கும் வரை வாதிட்டவர்.
சமய நல்லிணக்கம் தழைக்க குரல் கொடுத்தவர். இவரது இழப்பு தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கு பேரிழப்பாகும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-
எளிய கிராமத்தில் பிறந்து என்னைப்போன்று எண்ணற்றவர்களுக்கு கல்வியை மட்டும் அல்லாது மானுட சிந்தனைகளையும், சமூக பார்வையையும் அளித்த மாமனிதர். அவரது நூல்கள் தமிழ்பண்பாட்டின் வேர்கள்.
இளையான்குடி கல்லூரியில் அவர் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்தபோது, நான் அவருடைய மாணவனாக பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. இன்றளவும் எனக்கு வழிகாட்டிய ஒளி அணைந்து விட்டது. அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் உள்பட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் , கவிஞர் வைரமுத்து, ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story
×