என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சேலத்தில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பால் கொள்முதல் நடக்கிறது- ஆவின் நிர்வாகம்
- பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடாமல் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற சங்க உறுப்பினர்கள் கோரிக்கை முறையாக பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஆணையரகம் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.
சேலம்:
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பாக சேலம் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்த்தில் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடாமல் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 814 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் தடைபடாமல் இருக்க 28 பேர் கொண்ட சிறப்பு அலுவலர்களை நியமித்து உறுதி செய்யப்பட்டு அனைத்து சங்கங்களிலும் பால் கொள்முதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவராக உள்ள ஆர்.ஆர்.ராஜேந்திரனின் சங்கமான வி.புதுபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஆவின் பொது மேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பால்வளம்) ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பால் கொள்முதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரியண்ணனிடம், பொதுமேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாகல்பட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் கொள்முதல் செய்யப்பட்டது.
பால் விற்பனை விலை மற்றும் பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற சங்க உறுப்பினர்கள் கோரிக்கை முறையாக பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஆணையரகம் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.