என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்
- நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.
- மதுரை ஆதீனம் அரசியல் ரீதியாக பேசி வரும் சில கருத்துகள், ஏற்கனவே பேசும்பொருளாகி வருகின்றன.
மதுரை:
மதுரை பழங்காநத்தத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடந்தது. இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், "கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என்று சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை.
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார். எனவே அவர் நடித்த படத்தை யாரும் பார்க்கக்கூடாது. சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது, தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது?" என்று பேசினார்.
நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை முழுவதும் மதுரை ஆதீனத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடும் நீங்கள், தளபதி விஜயை பத்தி தப்பா பேசலாமா? இது தப்பு இல்லையா? வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்துங்கள். எங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளது.
மதுரை ஆதீனம் அரசியல் ரீதியாக பேசி வரும் சில கருத்துகள், ஏற்கனவே பேசும்பொருளாகி வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள கண்டன சுவரொட்டிகள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.