search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்.. வானில் வட்டமடிக்கும் திருச்சி விமானம்.. 141 பயணிகள் நிலை என்ன?
    X

    தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்.. வானில் வட்டமடிக்கும் திருச்சி விமானம்.. 141 பயணிகள் நிலை என்ன?

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. It is said to be hovering in the sky for an hour.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    விமானத்தின் ஹைட்ராலிக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால், அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்க முடியவில்லை. இதன் காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. விமானத்தில் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்துக்கும் அதிக ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன.

    Next Story
    ×