search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்
    X

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

    • ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
    • அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்காரதனத்தில் இருந்து மீட்டெடுத்து உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம்.

    பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×