search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜகவில் சமூக விரோதிகள்.. அண்ணாமலையை அட்டாக் செய்த தமிழிசை - தொடங்கிய பனிப்போர்?
    X

    பாஜகவில் சமூக விரோதிகள்.. அண்ணாமலையை அட்டாக் செய்த தமிழிசை - தொடங்கிய பனிப்போர்?

    • இந்த தேர்தலுக்காக தனது ஆளுனர் பதவியை விட்டுவிட்டு வந்த தமிழசை தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார்.
    • கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதன்பின்னர் தெலங்கானா மாநில ஆளுநர் பதவி வழக்கங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதிவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

    தமிழிசை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக இருந்த அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் இந்நாள் அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பேசி பாஜகவை தமிழகத்தில் காலூன்றச் செய்யும் பணியில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் பாஜகவுடன் இணக்கமாக இருந்த அதிமுக, கூட்டணியை முறித்துக்கொள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் பேச்சுகள் சென்றது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

    இந்த தேர்தலுக்காக தனது ஆளுனர் பதவியை விட்டுவிட்டு வந்த தமிழசை தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார். இந்நிலையில்தான் தமிழக பாஜகவின் அந்நாள் தலைவரான தமிழிசைக்கும் இந்நாள் தலைவரான அண்ணாமலைக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தமிழிசை முன்வைத்துள்ளார்.

    சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழிசை கூறியதாவது, கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.

    சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ள்ளார். மேலும் வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழிசையின் இந்த கருத்துக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×