என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா
- குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.
- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக ஆலோசித்து வருகிறது.
புதுடெல்லி:
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று ராஜினாமா செய்தார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடையும் நிலையில் அவர் மத்திய அமைச்சவையில் இருந்து விலகி உள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியான குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு பாஜக ஆலோசித்து வருகிறது. நூபுர் சர்மா விவகாரத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நக்வி சந்தித்து பேசினார்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அந்த பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ம் தேதி கடைசி நாள் ஆகும்.