search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வகுப்பறையில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த கலெக்டர்
    X

    வகுப்பறையில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த கலெக்டர்

    • ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார்.
    • திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோகண்டி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் வருகை மற்றும் காலை உணவுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் வகுப்பறை ஒன்றுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார். கலெக்டர் ராகுல்நாத்தின் இந்த செயல்முறையை மாணவ-மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் ராகுல்நாத் பாராட்டினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பவானி உடன் இருந்தார்.

    Next Story
    ×