search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார ரெயில் ஜன்னலில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்
    X

    மின்சார ரெயில் ஜன்னலில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்

    • ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

    பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே 'ரூட்டுதல' பிரச்சனையால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பஸ், ரெயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரெயில் வந்தபோது 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரே பெட்டியில் ஏறினர்.

    அவர்கள் ரெயில் புறப்பட்டதும் ரகளையில் ஈடுபட தொடங்கினர். சில மாணவர்கள் மின்சார ரெயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு சாகச பயணம் செய்தனர். மேலும் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடியும் சென்றனர். "பச்சையப்பா கல்லூரி மாஸ்...." என்று சத்த மிட்டபடி பயணம் செய்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மாணவர்களின் அட்டகாசத்தை கண்டித்த சில பயணிகளையும் மாணவர்கள் சிலர் கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பயணிகள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடனே பயணம் செய்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரெயில் பொட்டியின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்ததை பார்க்கவே பயமாக இருந்தது. மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான ரெயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் இல்லை" என்றனர்.

    Next Story
    ×