என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
9 பேரை பலிவாங்கிய பட்டாசு குடோன் விபத்து: உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
- தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.