search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தரை தட்டி நிற்கும் இழுவை கப்பல்- கூடங்குளத்தில் பரபரப்பு
    X

    தரை தட்டி நிற்கும் இழுவை கப்பல்- கூடங்குளத்தில் பரபரப்பு

    • சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது.
    • மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி செய்யும் எந்திரம் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

    சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது. நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது இழுவை கப்பலுக்கும், மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டதினால் நீராவி உற்பத்தி எந்திரத்தின் மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

    இதனால் மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதவையானது கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×