search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    LIVE

    மிரட்டும் கனமழை.. அலர்ட்டில் தமிழகம்.. லைவ் அப்டேட்ஸ்

    • சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.

    Live Updates

    • 15 Oct 2024 10:40 AM IST

      கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    • 15 Oct 2024 10:25 AM IST

      விடுமுறை தொடர்பான முடிவை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    • 15 Oct 2024 10:18 AM IST

      கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    • 15 Oct 2024 10:12 AM IST

      சென்னை முடிச்சூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்து விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

    • 15 Oct 2024 10:01 AM IST

      சென்னை சேத்துப்பட்டு, குசலாம்பாள் திருமண மண்டபம், குருசாமி பாலம் அருகே மழைநீர் தேங்கி உள்ளது.

      பெரியார் பாதை 100 அடி சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 15 Oct 2024 9:58 AM IST

      சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 21 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    • 15 Oct 2024 9:22 AM IST

      சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மணலியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • 15 Oct 2024 8:57 AM IST

      கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    • 15 Oct 2024 8:44 AM IST

      சென்னையில் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்ட்ரல்-பரங்கிமலை இடையே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

      இதேபோல் விமான நிலையம் - விம்கோ நகர் இடையே ஆறு நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில், வண்ணாரப்பேட்டை-ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது 47 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இரவு 11 மணிக்கு கடைசி ரெயில் புறப்படுகிறது.

    • 15 Oct 2024 8:38 AM IST

      கனமழையால் மழை நீர் தேங்கியதை அடுத்து பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள பெரம்பூர் சுரங்கப்பாதை தவிர்த்து மற்ற சுரங்கப்பாதைகள் எதிலும் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.




       


    Next Story
    ×