search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    LIVE

    கொட்டித்தீர்க்கும் கனமழை.. களத்தில் முதல்வர்.. அமைச்சர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம்.. லைவ் அப்டேட்ஸ்

    • சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.

    டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Live Updates

    • 15 Oct 2024 10:12 AM IST

      சென்னை முடிச்சூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்து விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

    • 15 Oct 2024 10:01 AM IST

      சென்னை சேத்துப்பட்டு, குசலாம்பாள் திருமண மண்டபம், குருசாமி பாலம் அருகே மழைநீர் தேங்கி உள்ளது.

      பெரியார் பாதை 100 அடி சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 15 Oct 2024 9:58 AM IST

      சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 21 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    • 15 Oct 2024 9:22 AM IST

      சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மணலியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • 15 Oct 2024 8:57 AM IST

      கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    • 15 Oct 2024 8:44 AM IST

      சென்னையில் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்ட்ரல்-பரங்கிமலை இடையே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

      இதேபோல் விமான நிலையம் - விம்கோ நகர் இடையே ஆறு நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில், வண்ணாரப்பேட்டை-ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது 47 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இரவு 11 மணிக்கு கடைசி ரெயில் புறப்படுகிறது.

    • 15 Oct 2024 8:38 AM IST

      கனமழையால் மழை நீர் தேங்கியதை அடுத்து பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள பெரம்பூர் சுரங்கப்பாதை தவிர்த்து மற்ற சுரங்கப்பாதைகள் எதிலும் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.




       


    • 15 Oct 2024 8:31 AM IST

      வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 15 Oct 2024 8:24 AM IST

      திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வெளுத்து வாங்கும் கனமழை


       

    • 15 Oct 2024 8:09 AM IST

      சென்னையில் ரெயில்களின் புறப்பாடு, நேரம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள தெற்கு ரெயில்வேயின் சென்னை பகுதி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகள் 044-2533 0952, 044-2533 0953 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

    Next Story
    ×