என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் வருமான வரி சோதனை
Byமாலை மலர்16 May 2024 2:01 PM IST (Updated: 16 May 2024 2:52 PM IST)
- வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
- கல்லூரி தாளாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளைத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் காலை முதலே வருமான வரி சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியின் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×