என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நெல்லை, தூத்துக்குடியில் மழைக்கு மேலும் 7 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
- நெல்லையில் மழை பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
- ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததில், ஒரு வீட்டில் வசித்த 3 பேர் இறந்தனர்.
நெல்லை:
நெல்லையில் மழைக்கு நேற்று முன்தினம் வரை 12 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல்லை டவுன் தாமிரபரணி ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்தார். நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளம் வடிந்த நிலையில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (61) என்பவர் மாவு அரைப்பதற்காக சுவிட்ச் போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நெல்லையில் மழை பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 20 பேர் இறந்தனர். வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் நேற்று ராஜகோபால் (61) என்பவர் இறந்து கிடந்தார்.
இதேபோன்று தூத்துக்குடியில் மற்றொருவரும் பிணமாக மீட்கப்பட்டார். ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததில், ஒரு வீட்டில் வசித்த 3 பேர் இறந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.