என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் உள்ளதா?- சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் பேட்டி
- அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
- சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்பட்டு:
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து கேட்டறிய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி: ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வந்த பிறகு ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?
கேள்வி: விசாரணை சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் சொல்ல முடியும்.
கேள்வி: புதிதாக உண்மை கண்டறியும் சோதனை ரவுடிகள் மீது நடத்த உள்ளதாக சொல்கிறார்களே?
பதில்: கிடையாது, விசாரணை முடிந்ததற்கு பிறகு தான் கூறுவோம்.
கேள்வி: ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
பதில்: 10 வருடங்களில் என்ன நடந்தது என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆறு மாதங்களில் என்ன செய்தோம் என்று நாங்கள் சொல்ல முடியும்.
கேள்வி: வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற போகிறீர்கள். அதற்கு முன் கொலையாளிகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்: சொல்ல முடியாது.
கேள்வி: விசாரணை பழைய முறையில் நடைபெறுகிறதா? ஏதேனும் மாற்று முறையில் நடைபெறுகிறதா?
பதில்: இப்போது சொல்ல முடியாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
கேள்வி: விசாரணைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா?
பதில்: 100 சதவீதம் ஒத்துழைக்கின்றனர்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து திருவெறும்பூர் போலீஸ் நிலையம் சென்ற டி.ஜி.பி ஷகீல் அக்தர் அங்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை நிலை எப்படி உள்ளது, வேறு யாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், உண்மை கண்டறியும் சோதனை யாருக்காவது மேற்கொள்ள வேண்டுமா, முதலில் யாருக்கு இந்த சோதனை செய்ய வேண்டும். என்பது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்