search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு பங்களாவில் நீதிபதி ஆய்வு செய்ய கோரிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கொடநாடு பங்களாவில் நீதிபதி ஆய்வு செய்ய கோரிக்கை

    • கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப நிபுணர் குழு மீண்டும் வர இருப்பதால் கூடுதல் கால அவகாசம் தேவை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    அப்போது, கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    தொழில் நுட்ப நிபுணர் குழு சேகரித்த தகவல் குறித்த அறிக்கை இன்னும் வரவில்லை. தொழில்நுட்ப நிபுணர் குழு மீண்டும் வர இருப்பதால் கூடுதல் கால அவகாசம் தேவை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.23-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×