search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் அருகே ரூ.12 லட்சம் மோசடி- கோவில் செயல் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
    X

    சேலம் அருகே ரூ.12 லட்சம் மோசடி- கோவில் செயல் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

    • இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சாமிக்கு வார பூஜை, மாத பூஜை, வருட பூஜை நடத்தியதாகவும், இதற்காக அபிஷேகப் பொருட்கள் மாலை அலங்கார பந்தல் சீரியல் பல்புகள் அமைத்ததாகவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்ததாக ரூ.12 லட்சம் வரை எடுக்கப்பட்டதாகவும், போலி பில் வைத்து மோசடி செய்யப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.

    கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்த மோசடி நடந்ததாகவும் அப்போது கோவில் செயல் அலுவலராக சசிகலா என்பவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அப்போதைய செயல் அலுவலராக இருந்த சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×