என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது- எல்.முருகன்
- தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.
இதற்காகர் பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்தார். பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றார்.