search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் கேரளாவுக்கு கடத்த பதுக்கிய  4 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    தூத்துக்குடியில் கேரளாவுக்கு கடத்த பதுக்கிய 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×