search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...

    • தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    Live Updates

    • 20 Feb 2024 11:30 AM IST

      ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் 5 மஞ்சள் மெருகூட்டும், வேக வைக்கும் இயந்திரங்கள் வாங்க ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:29 AM IST

      விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களைக் காத்திடும் வகையில் சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 20 Feb 2024 11:28 AM IST

      10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:28 AM IST

      10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:25 AM IST

      2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:20 AM IST

      வீட்டுத் தோட்டத்தில் பழங்கள், காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்க வாழை, முருங்கை செடிகள் வழங்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 20 Feb 2024 11:19 AM IST

      மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:19 AM IST

      மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ.3.67 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:18 AM IST

      மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:18 AM IST

      உதகையில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

    Next Story
    ×