search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...

    • தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    Live Updates

    • 20 Feb 2024 11:16 AM IST

      ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:14 AM IST

      தென்காசி மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.

    • 20 Feb 2024 11:14 AM IST

      செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

    • 20 Feb 2024 11:13 AM IST

      தஞ்சாவூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.

    • 20 Feb 2024 11:12 AM IST

      கன்னியாகுமரியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பூங்கா அமைக்கப்படும்.

    • 20 Feb 2024 11:10 AM IST

      சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:09 AM IST

      தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:08 AM IST

      சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு. முதல் மூன்று விவசாயிகளுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 20 Feb 2024 11:06 AM IST

      சூரியகாந்தி, செம்பருத்தி, ரோஜா உற்பத்தியை மேம்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

    • 20 Feb 2024 11:06 AM IST

      மா உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி, வாழை உற்பத்திக்கு ரூ.12.73 கோடி, பலா சாகுபடிக்கு ரூ.1.14 கோடியும் ஒதுக்கீடு

    Next Story
    ×