search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 5:51 AM GMT

      பூந்தமல்லி-கோடம்பாக்கம் வழித்தடத்தில் 2025 டிசம்பரில் மெட்ரோ ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்

    • 19 Feb 2024 5:51 AM GMT

      சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 12000 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 5:49 AM GMT

      விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 5:48 AM GMT

      மதுரையில் 2500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்.

    • 19 Feb 2024 5:47 AM GMT

      கல்லணை கால்வாய் ரூ.400 கோடி செலவில் புனரமைக்கப்படும்

    • 19 Feb 2024 5:46 AM GMT

      தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    • 19 Feb 2024 5:46 AM GMT

      தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும்

    • 19 Feb 2024 5:42 AM GMT

      அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 5:35 AM GMT

      மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 5:33 AM GMT

      சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள் தொடங்கப்படும்.

    Next Story
    ×